குடியரசு தின அணிவகுப்பு பற்றி மத்திய அரசானது செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் வருகிற ஜனவரி 26ம் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் நாட்டின் வளமான கலாச்சார பாரம்பரியம், பொருளாதார முன்னேற்றம் மற்றும் வலுவான பாதுகாப்பு போன்றவற்றை சித்தரிக்கும் 23 அலங்கார ஊர்திகள் இடம்பெறுகிறது. 17 ஊர்திகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும், பல அமைச்சகங்கள் மற்றும் துறைகளின் சார்பாக 6 ஊர்திகளும் இந்த அணிவகுப்பில் இடம்பெறுகிறது.

இதற்கிடையில் பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலிருந்து அலங்கார ஊர்திகள் குறித்து பெறப்பட்ட முன் மொழிவுகளை நிபுணர்குழு ஆய்வு மேற்கொண்டது. அலங்கார ஊர்தியின் கருப் பொருள், விளக்கக்காட்சி, அழகியல் மற்றும் தொழில்நுட்பக் கூறுகள் பற்றி மாநிலங்களின் பிரதிநிதிகளுடன் நிபுணர் குழு உறுப்பினர்கள் பல சுற்று கலந்துரையாடல்களை மேற்கொண்டு ஆய்வு செய்து, அதனடிப்படையில், குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் அந்த ஊர்திகளின் தேர்வு நடைமுறை மேற்கொள்ளப்பட்டது” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.