தமிழக பா.ஜ.க கட்சியின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். சில மாதங்களுக்கு முன்னதாக காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகினார். இதையடுத்து தமிழ்நாடு பாஜக கட்சியின் IT-Wing தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் சிடிஆர் நிர்மல் குமார் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். மேலும் பா.ஜ.க ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக அறிவிப்பு வெளியிட்டார்.

பாஜக நிர்வாகிகள் அதிமுகவுக்கு தாவுவதால் இரு கட்சிகள் இடையேயான மோதல் முற்றுகிறது. அந்த வகையில் அண்ணாமலை அதிமுகவை விமர்சித்தார். இந்நிலையில் அதிமுக ஐடி அணி செயலாளர் சிங்கை ராமச்சந்திரன் “நோட்டாவை விட குறைவான வாக்குகள் வாங்கிவந்த நிலையில், 2021ல் பாஜக எப்படி எம்எல்ஏக்களை வென்றது என்பதே இதற்கான பதில். நிர்வாகிகள் வெளிவந்ததை மறைக்க அதிமுகவை வளர்க்க பாஜகவின் ஆட்கள் தேவை என்பது நகையே என்று சாடி உள்ளார்.