அண்ணாமலை பாஜகவிற்கான இறுதி யாத்திரையை நடத்துகிறார் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பேசியது குறித்து கருத்து தெரிவித்த அண்ணாமலை, ஒரு அரசவையில் அரசவைப் புலவர் இருப்பார். அரசவைப் புலவனுடைய வேலை மன்னனை புகழ்ந்து பாடிக்கிட்டே இருந்தா பொற்காசு கிடைக்கும். இன்னைக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைமை எப்படி ஆகிவிட்டது என்றால் ? அரசவையில் இருக்கக்கூடிய புலவர்கள் போல மாதிரிட்டாங்க. அரசவை புலவர்களை கூட நாம் மரியாதை கொடுக்கணும்.

காரணம் உண்மையான தன்னுடைய இலக்கியத்தையும், பக்தியையும் காட்டுனாங்க. ஆனால் இன்னைக்கு கம்யூனிஸ்ட் கட்சி திமுகவை புகழ்வதற்கு…  திமுகவை எப்போதுமே ஆதரித்து பேசுவதற்கு….  எப்படிப்பட்ட ஒரு இயக்கம் ? எப்படிப்பட்ட நண்பர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியில இருந்தாங்க ? எப்படிப்பட்ட சித்தாந்தம் கம்யூனிஸ்ட் கட்சியில ஒரு காலத்தில் இருந்தது.

இன்னைக்கு கே.பாலகிருஷ்ணன் அவர்கள் எல்லாம் கம்யூனிஸ்ட் கட்சியில் ஒரு கருப்பு புள்ளி. அவர் எல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்துக்கே ஒரு கரும்புள்ளி. கம்யூனிஸ்ட் கொள்கைக்கு அவர் ஒரு கரும்புள்ளி. கோயம்புத்தூர் எம்.பி பேசட்டுமே…  மூணு வருஷமா,  நாலு வருஷமா காணாமல் போனவரு…  இன்னைக்கு என் மண்,  என் மக்கள் யாத்திரை வந்த பிறகு,  கோயம்புத்தூருக்குள் எட்டிப் பார்க்கிறார் எம்பி.

கோயம்புத்தூருக்கு எந்த வளர்ச்சியும் வேண்டாம், ரோடு வேண்டாம், அது வேண்டாம்னு சொல்றாரு.  கம்யூனிஸ்ட் என்றாலே இந்தியாவினுடைய வளர்ச்சிக்கு எதிரிதான். அதனாலதான் வெஸ்ட் பெங்காலில்  எப்படி இருந்த கம்யூனிஸ்டு. எத்தனை கம்யூனிஸ்ட்தொண்டர்களை மேற்கு வங்கத்துல டிஎம்சிகாரங்க கொன்றுருக்காங்க. இவர்கள் வெட்கம் இருந்தால் ? மம்தா பானர்ஜி கூட்டணி வைத்த இந்தியா கூட்டணியில்  இருப்பாங்களா ?

அதனால் என்னை பொறுத்தவரை கம்யூனிஸ்ட் சித்தாந்தத்திற்கே. பாலகிருஷ்ணன் அவர்கள் ஒரு கரும்புள்ளி. காரணம் இந்த சித்தாந்தம் இப்படிப்பட்ட தலைவர்களை நிச்சயமாக உருவாக்காது.  ஒருத்தரை புகழ்ந்து பேசுவது, பாராட்டி பேசுவது, அவங்க பின்னாடி நிற்பாத்து… திராவிட முன்னேற்றக் கழகத்தை போன்ற கட்சிகளுக்கு எல்லாம் பாராட்டி பேச வேண்டிய கட்டாயம் தமிழக கம்யூனிஸ்ட் வந்துருச்சு என்பது சாவக்கேடு என தெரிவித்தார்.