மதுரையில் நடந்த அதிமுக மாநாட்டில் பேசிய எடப்பாடி கே.பழனிச்சாமி, பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் கட்சி தோற்றுவிக்கப்பட்டு முதன்முதலாக மதுரை மாவட்ட…. ம் அப்போது திண்டுக்கல் மதுரை மாவட்டத்தோடு இருந்தது ஒருங்கிணைந்த மாவட்டமாக திண்டுக்கல் இருந்தது.

அன்றைய தினம் திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் முதன் முதலாக பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தேர்தலை சந்திக்கிறார்கள். அந்த திண்டுக்கல் நாடாளுமன்ற இடை தேர்தலில் நம்முடைய புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உடைய ஆசி பெற்ற கழக வேட்பாளர் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று சாதனை படைத்தார்.

ஒரு கட்சி துவங்கி 6 மாத காலத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சி என்று சொன்னால் ? அது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக கட்சி தான். பொன்மனச் செம்மல் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் முகத்தை பார்த்தால் போதும். தானாக வாக்குகள் கிடைக்கும்.

அப்படி மக்கள் சக்தி பெற்ற மாபெரும் தலைவர் தோற்றுவித்த இயக்கம் தான் அண்ணா திமுக இயக்கம். பிறகு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமாக மாற்றப்பட்டது.  தமிழகத்தில் எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. ஆனால் நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற இயக்கம் என்று சொன்னால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தான் முதலிலே நிற்கின்றது என தெரிவித்தார்.