2023 ஐபிஎல் சீசனில் 4 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் 183 ரன்களை அதிரடியாக குவித்து அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கிறார் ஹெட் மேயர்..

இந்தியன் பிரீமியர் லீக்கின் புதிய சீசனில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அற்புதமாக செயல்பட்டது. கடந்த முறை இறுதிப் போட்டிக்கு வந்து பட்டத்தை வெல்வதைத் தவறவிட்ட அணி இந்தமுறையும் சிறப்பாகவே செயல்பட்டு வருகிறது. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக அதிரடியாக அரைசதம் அடித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றியை வசப்படுத்திய இந்த பேட்ஸ்மேன், இதுவரை 5 போட்டிகளில் ஒரே ஒருமுறை மட்டுமே ஆட்டமிழந்துள்ளார்.

ஐபிஎல் 2023ல், தற்போது முதலிடத்தில் இயங்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆட்டம் அபாரமாக உள்ளது. அந்த அணியின் பேட்ஸ்மேன்களும், பந்து வீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், வெற்றிக்கு பின் வெற்றியை பதிவு செய்து அந்த அணி நம்பர் ஒன் ஆக உள்ளது.ராஜஸ்தான் அணி 5 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. வேறு எந்த அணியும் 3 வெற்றிகளுக்கு மேல் பெறவில்லை. டெல்லி கேபிடல்ஸ் அணியால் ஒரு போட்டியில் கூட வெல்ல முடியவில்லை..

ராஜஸ்தான் ராயல்ஸின் வெற்றிக்கு பேட்டர்கள் அதிக பங்களிப்பை வழங்கினர், இதிலும் ஷிம்ரோன் ஹெட்மயர் குறைந்த வரிசையில் வந்து அற்புதங்களைச் செய்தார். குறுகிய ஆனால் மிகவும் பயனுள்ள இன்னிங்ஸ்களை விளையாடும் அவர், ஒவ்வொரு போட்டியிலும் தனது ஸ்கோரால் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதுவரை, 5 போட்டிகளில், ஹெட்மயர் ஒரு முறை மட்டுமே அவுட் ஆகி வெளியேறியுள்ளார்..

ஷிம்ரன் ஹெட்மேயர் மொத்த ஸ்டிரைக் ரேட் 184 உடன் பேட் செய்தார், இந்த சீசனில் விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதில், 5 போட்டிகளில் 4 போட்டிகளில் அவர் ஆட்டமிழக்கவில்லை. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 56 ரன்கள் எடுத்ததே அவரது சிறந்த ஸ்கோர் ஆகும். இந்த சீசனில் 99 பந்துகளை சந்தித்து 183 ரன்கள் குவித்துள்ளார் என்பது ஆச்சரியமான விஷயம்.

 

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான முதல் போட்டியில் ஆட்டமிழக்காமல் 22 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸுக்கு எதிரான 2வது போட்டியில், அவர் 36 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார், மேலும் அவர் விக்கெட்டை  இழந்த ஒரே இன்னிங்ஸ் இதுதான். இதைத் தொடர்ந்து டெல்லிக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 39 ரன்களும், சென்னைக்கு எதிராக ஆட்டமிழக்காமல் 30 ரன்களும், குஜராத் அணிக்கு எதிராக 56 ரன்களும் எடுத்துள்ளார்.

5 போட்டிகளில் விளையாடி 183 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் ஷிம்ரோன் ஹெட்மயர் அதிக ஸ்ட்ரைக் ரேட்டைப் பெற்றுள்ளார். ஸ்ட்ரைக் ரேட்டில் ஹெட் மேயர் முதலிடத்தில் உள்ளார்.. அதிகபட்ச ரன்களை குவித்த (259 ரன்கள்) பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸ் 172 ஸ்டிரைக் ரேட்டில் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் 234 ரன்கள் குவித்து 170 ஸ்டிரைக் ரேட்டுடன் வெங்கடேஷ் ஐயர் உள்ளார்