ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

2023 ஒருநாள் உலக கோப்பை தோல்விக்கு பின் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இளம் இந்திய அணி ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் 2 டி20 போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று 2-0 என முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் கவுகாத்தியில் 7 மணிக்கு நடைபெறும் 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் மேத்யூ வேட் முதலில் பந்து வீசுவதாக அறிவித்துள்ளார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்கிறது. ஆஸ்திரேலியா அணியில் ஸ்மித், சாம்பா ஆகியோர் இன்று ஆடும் லெவனில் இல்லை. இன்று டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி விளையாடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய அணியில் முகேஷ் குமாருக்கு பதிலாக அவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

கவுகாத்தியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டிக்கு முன்னதாக இந்திய அணியில் இருந்து விடுவிக்க வேகப்பந்து வீச்சாளர் முகேஷ் குமார் பிசிசிஐக்கு கோரிக்கை விடுத்துள்ளார். முகேஷ் திருமணம் செய்து கொண்டார், மேலும் அவரது திருமண விழாக்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ராய்பூரில் நடக்கும் 4வது டி20 போட்டிக்கு முன்னதாக அவர் அணியில் இணைவார். எஞ்சிய தொடருக்கான இந்திய அணியில் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா XI :

ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (து.கே), சூர்யகுமார் யாதவ் (கே), ரிங்கு சிங், திலக் வர்மா, அக்சர்  படேல், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.

ஆஸ்திரேலியா XI :

டிராவிஸ் ஹெட், ஆரோன் ஹார்டி, ஜோஸ் இங்கிலிஸ், கிளென் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோய்னிஸ், டிம் டேவிட், மேத்யூ வேட் (கே.விகீ ), நாதன் எல்லிஸ், பெஹ்ரென்டோர்ஃப், தன்வீர் சங்கா, கேன் ரிச்சர்ட்சன்.