அமெரிக்காவில் உள்ள ஃப்ளோரிடா மாகாணத்தில் இந்திய வம்சாவளியை சேர்ந்த அபிஜித் தாஸ் என்பவர் வக்கீலாக பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னை வழக்கு நிமித்தமாக பார்க்க வருபவர்களிடம் பண மோசடியில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அதாவது அவர்களது வங்கி கணக்கில் இருந்து அபிஜித் தாஸ் தன்னுடைய வங்கி கணக்கிற்கு இந்திய ரூபாய் மதிப்பில் 40 கோடியை மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து புகார் எழுந்ததையடுத்து காவல் துறையினர் அபிஜித் தாஸை கைது செய்துள்ளனர். பண மோசடியில் ஈடுபட்ட அபிஜித்க்கு  20 ஆண்டுகள் சிறை தண்டனை அல்லது 2 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம் என்றும் அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படலாம் என்றும் தெரியவந்துள்ளது. 2021 ஆம் வருடம் இவர் அமெரிக்க எம்பி தேர்தலில் போட்டியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.