தமிழக வீரர் சாய் சுதர்ஷனின் விக்கெட் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..

சாய் சுதர்ஷனின் விக்கெட் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர் ஆட்டமிழந்த பந்து நோ பால் என்று நம்பப்படுகிறது. ஆனால் மூன்றாவது நடுவர் நோ பால் கொடுக்காததால் தொடக்க ஆட்டக்காரர் 29 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

பாகிஸ்தானுக்கு எதிரான பரபரப்பான இறுதி போட்டியில் 353 ரன்கள் என்ற மலை போன்ற இலக்கை துரத்த இந்திய அணி களமிறங்க, இந்திய தொடக்க ஆட்டக்காரர்கள் நல்ல தொடக்கத்தைப் பெற்றனர். ஆனால் பின்னர் சிறப்பாக பேட் செய்த தொடக்க வீரர் சாய் சுதர்ஷன் 28 பந்துகளில் 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

உண்மையில், இந்திய இன்னிங்ஸின் 9வது ஓவரில், அர்ஷத் இக்பால் வீசிய ஷார்ட் பிட்சை சுதர்சன் அடிக்க முயன்றார், ஆனால் பந்து முகமது ஹாரிஸிடம் சென்றது. ஆனால் சுதர்ஷனின் விக்கெட்டில் குழப்பம் உள்ளது.

ஆன்-பீல்ட் அம்பயர் ஃப்ரண்ட் ஃபுட் நோ பாலை சரிபார்த்தார். டிவி ரீப்ளே பார்க்கும்போது, ​​அர்ஷத்தின் கால் கோட்டுக்கு வெளியே இருப்பது போல் இருந்தது. ஆனால், மூன்றாவது நடுவர் அப்படி நினைக்காமல் நோ பால் கொடுக்கவில்லை. இதனால் சுதர்சன் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

இந்த போட்டியில் சாய் சுதர்ஷனின் விக்கெட் இந்தியாவுக்கு முக்கியமானது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் சதம் அடித்தார். சுதர்சன் இறுதிப் போட்டியிலும் நல்ல தொடக்கத்தைப் பெற்று 28 பந்துகளில் 29 ரன்களை பெற்று விளையாடிக் கொண்டிருந்தார். நடுவர் அர்ஷத்துக்கு நோ பால் கொடுத்திருந்தால், ஒருவேளை சுதர்சன் அற்புதமாக ஏதாவது செய்து இந்தியாவை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றிருக்கலாம். இதனால் இந்திய ரசிகர்கள் அது நோபால் என கூறி போட்டோவை பகிர்ந்து நடுவரை விமர்சித்து வருகின்றனர்.

இந்தியா டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்ய, முதலில் பேட் செய்த பாகிஸ்தான் 353 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. இதில் இந்திய அணி 224 ரன்களுக்கு ஆட்டமிழந்து 128 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.. இதனால் பாகிஸ்தான் ஏ அணி 2வது முறையாக சாம்பியன் ஆனது.