ஆசிய விளையாட்டுப் போட்டியின் ஆடவர் கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகிறது.

2023 ஆசிய விளையாட்டுப் போட்டியில் ஆடவர் கிரிக்கெட்டின் இறுதிப் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன. இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால் ஆசிய ஆடவர் கிரிக்கெட் போட்டியில் முதல் தங்கத்தை இந்தியா வெல்லும். ஏனெனில் இந்திய பெண்கள் அணி ஏற்கனவே தங்கள் பிரிவில் தங்கத்தை வென்றுள்ளது. எனவே மகளிர் அணியை  போலவே இந்திய அணி தங்கத்தை தட்டி தூக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அக்டோபர் 6 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில், இந்தியா வங்காளதேசத்தை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் வந்துள்ளது. இந்திய அணி 9.2 ஓவர்களில் 97 ரன்களைத் துரத்த, திலக் வர்மா அரைசதம் விளாசினார். கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் 40 ரன்கள் எடுத்தார்.

இதனிடையே, இரண்டாவது அரையிறுதியில் ஆப்கானிஸ்தான் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது. மேலும் இன்று காலை 6:30 மணிக்கு பாகிஸ்தானும், வங்காளதேசமும் மூன்றாவது இடத்துக்காகப் (வெண்கலப்பதக்கம்) போட்டியிடுகின்றன.

இந்தியா vs ஆப்கானிஸ்தான் ஆசிய விளையாட்டு 2023 ஆடவர் கிரிக்கெட் இறுதிப் போட்டி பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே.

இந்தியா – ஆப்கானிஸ்தான் இறுதிப் போட்டி விவரங்கள் :

போட்டி:  இந்தியா vs ஆப்கானிஸ்தான், ஆண்கள் கிரிக்கெட் இறுதி, ஆசிய விளையாட்டு 2023

நாள்:  அக்டோபர் 7 சனிக்கிழமை

இந்திய நேரம்:  காலை 11:30 மணி IST

இடம் :  ஜெஜியாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் பிங்ஃபெங் கிரிக்கெட் மைதானம், ஹாங்சோ, சீனா

IND vs AFG ஆசிய விளையாட்டு 2023 இறுதி வானிலை அறிக்கை :

அக்யூவெதரின் கூற்றுப்படி, ஹாங்ஜோவில்  மழை மற்றும் தூறல் காலை வேளையில் பெய்யும், மற்றபடி நாள் முழுவதும் அக்டோபர் 7, சனிக்கிழமையன்று மேகமூட்டமாகவும் குளிராகவும் இருக்கும். காலையில் மழைப்பொழிய  80 சதவீதம் வாய்ப்புள்ளது. இருப்பினும், இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆசிய விளையாட்டுப் போட்டி 2023 இறுதிப் போட்டிக்கு மழை பொழிய வாய்ப்பில்லை.

இந்தியா vs ஆப்கானிஸ்தான் சாத்தியமான 11 :

இந்தியா:

ருதுராஜ் கெய்க்வாட் (கே), யஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ஜிதேஷ் சர்மா (வி.கீ.), சிவம் துபே, ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ரவி பிஷ்னோய், சாய் கிஷோர், அர்ஷ்தீப் சிங்.

ஆப்கானிஸ்தான் :

செடிகுல்லா அடல், முகமது ஷாஜாத் (வி.கீ), நூர் அலி சத்ரான், ஷாஹிதுல்லா கமால், குல்பாடின் நைப் (கே), ஷரபுதீன் அஷ்ரஃப், அஃப்சர் ஜசாய், கரீம் ஜனத், கைஸ் அகமது, ஃபரீத் அகமது மாலிக், ஜாஹிர் கான்