இந்தியாவிலேயே முதல்முறையாக சென்னை ஐஐடி கல்லூரியில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை (department of medical science and technology) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மருத்துவ அறிவியல் மற்றும் பொறியியல் பாடத்திட்டத்தில் நான்காண்டு பிஎஸ் படிப்பு அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த பாடத்திட்டம் மாணவர்களை அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு, மருந்து கண்டுபிடிப்பு மற்றும் உயிர் காக்கும் மருத்துவ சாதனங்கள் போன்றவற்றை கண்டுபிடிப்பதற்கு ஊக்கப்படுத்தும்.

அதாவது இந்தியாவில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணிகளை இந்த துறை மேற்கொள்ளும். மேலும் இதற்கான மேம்பாட்டு பணிகளை கவனிக்கும் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த உயர்மட்ட மருத்துவர்கள் இந்த துறையின் பேராசிரியர்களாக இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.