
தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருப்பவர் சந்தானம். இவர் விஜய், அஜித் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் சமீப காலங்களில் நடிகராகவும் நடித்து வருகிறார். இவர் தற்போது டிடி நெக்ஸ்ட் லெவல் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்ப படம் மே 16ஆம் தேதி ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த நடிகை தேவயானி வள்ளுவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற திரைப்படத்தில் அவரது கணவரை சந்தானம் மோசமாக கலாய்த்து இருப்பது தனக்கு பிடிக்கவில்லை என்று கூறியிருந்தார். இதற்கு பதில் அளித்த சந்தானம் கூறியதாவது, அந்தப் படத்துக்காக நாங்கள் ராஜ்குமார் சாரிடம் பேசும் போதே இது பவர் ஸ்டார் மாதிரியான கேரக்டர் தான் என்று கூறினோம்.
முதலில் நாங்கள் ஸ்கிரிப்ட், வசனம் எல்லாத்தையும் சொல்லிவிட்டு இதெல்லாம் உங்களுக்கு ஓகேவா என்று கேட்டுவிட்டு தான் நடித்தோம். காமெடி என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று தெரிவித்துள்ளார்.