கர்நாடகாவில் பாஜக கட்சி தோல்வி அடைந்த நிலையில் அங்கு தேர்தல் பொறுப்பாளராக பணியாற்றிய அண்ணாமலையை எதிர்கட்சிகள் சரமாரியாக விமர்சித்து வருகிறது. இந்நிலையில் கர்நாடகாவில் இருந்து சென்னை திரும்பிய அண்ணாமலை கர்நாடகா தேர்தல் தோல்வி குறித்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது கர்நாடகாவில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார். இம்முறை மக்கள் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்துள்ளனர். அவர்களின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.

ஆனால் இது நாடாளுமன்ற தேர்தலை எந்த விதத்திலும் பாதிக்காது. கர்நாடகாவில் மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 26 தொகுதிகளுக்கு மேல் கண்டிப்பாக பாஜக வெற்றி வாகை சூடும். எனக்கு அரசியல் அனுபவம் குறைவு தான். நான் அரசியல் சாணக்கியனோ, அரசியல் அறிவு உள்ளவனோ, அரசியல் அறிஞனோ கிடையாது. என்னைப் பொறுத்தவரை தோல்வி ஒரு நல்ல பாடம். பத்து ஆண்டுகால அரசியல் தரக்கூடிய அனுபவத்தை ஒரு தேர்தல் கொடுத்து விடும். அந்த அனுபவம் தற்போது எனக்கு கிடைத்திருக்கிறது. மேலும் என்னுடைய அரசியல் வாழ்க்கையில் பா பால் தரேன் இன்னும் பல வெற்றிகள் மற்றும் தோல்விகளை பார்ப்பேன் என்று கூறியுள்ளார்.