நடப்பாண்டில் உலக வர்த்தக வளர்ச்சி குறையும் என கணிக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா பொருளாதார பகுப்பாய்வு மற்றும் மக்கள் தொகை பணியகம் வெளியிட்ட தரவுகளின் படி கடந்த 2020 ஆம் ஆண்டில் வலுவான ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக்கு இடையில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறை 12.2% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

அதோடு சரக்கு மற்றும் சேவை துறை பற்றாக்குறை 948.1 மில்லியன் டாலராக இருந்தது என்றும் 2022 ஆம் ஆண்டிற்கான பொருட்கள் மற்றும் சேவை பற்றாக்குறை அதிகரிப்பில் பொருட்களின் பற்றாக்குறை 9.3 அதிகரித்துள்ளது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையே பணவீக்கத்தை சமாளிக்கும் பொருட்டு உலகளாவிய முக்கிய மத்திய வங்கிகள் வட்டி விகிதத்தை உயர்த்தி உள்ளதால் நடைபாண்டில் உலக வர்த்தக வளர்ச்சி குறைந்து காணப்படும் என கணிக்கப்பட்டுள்ளது.