அமெரிக்க நாட்டில் பனிப்புயல் பலமாக வீசியதில் 60-க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்க நாட்டில் கடந்த வாரத்தில் பனிப்புயல் கடுமையாக வீசியது. இதில், நியூயார்க் உட்பட பல்வேறு மாகாணங்களும் கடும் பாதிப்புகளை சந்தித்தன. இந்த பனிப்புயலில் சிக்கி 60க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்நிலையில், அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் கடந்த சனிக்கிழமை அன்று பலத்த மழை கொட்டி தீர்த்தது.

சாலைகள் எங்கும் வெள்ளம் ஓடியது. இதனால் மரங்கள் விழுந்து, சாலைகள் அடைக்கப்பட்டது.  எனவே, போக்குவரத்து கடுமையாக பாதிப்படைந்தது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்து புத்தாண்டு கொண்டாட்டங்களும் உற்சாகமின்றி காணப்பட்டது.

வானிலை மைய அதிகாரிகள், சமீபத்தில் பெய்த இந்த மழை, வரலாற்றில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகமாக இருந்தாக கூறியிருக்கிறார்கள். அதாவது, கடந்த சனிக்கிழமை அன்று கொட்டி தீர்த்த மழை 5.45 அங்குலம் அளவிற்கு பதிவாகியிருந்தது.