திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நவநாயக்கர்குளத்து பகுதியில் கூலி வேலை பார்க்கும் பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகன் நாகராஜ் மாற்றுத்திறனாளி ஆவார். தற்போது ராஜராஜன் தி.கூடலூர் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தினமும் பள்ளிக்கு சென்று வர 8 கிலோமீட்டர் தூரம் சக்கர நாற்காலியை சுழற்றியபடி நாகராஜன் பயணம் செய்கிறார்.’

இதுகுறித்து நாகராஜ் கூறியதாவது, பள்ளிக்கு செல்லும்போது மேடான பகுதியை கடந்து செல்ல சிரமமாக இருக்கிறது. மேலும் கைகளால் நகர்த்தி செல்வதால் இரண்டு கைகளிலும் வலி ஏற்படுகிறது. இந்நிலையில் கோடை வெயில் காலம் என்பதால் பள்ளியில் இருந்து வீட்டிற்கு செல்வதற்கு கஷ்டப்படுகிறேன். எனவே பேட்டரியுடன் கூடிய சக்கர நாற்காலியை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளான்.