இன்றைய காலகட்டத்தில் மக்கள் பலரும் அதிக அளவு ஆன்லைன் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் மருத்துவமனைகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவதற்கான UPI கட்டண வரம்பு ஐந்து லட்சம் ரூபாயாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக UPI கட்டண வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக இருந்த நிலையில் UPI பணப்பரிவர்த்தனைகள் அதிக அளவில் நடைபெற்ற வருவதால் நுகர்வோருக்கு உதவுவதற்காக 5 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் டிஜிட்டல் பண பரிவர்த்தனை அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.