தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் சீனி, பருப்பு ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. மக்களுடைய வாழ்வாதாரத்தில் நியாய விலைக் கடைகளுக்கு முக்கிய பங்கு உண்டு. ஆனால் இதற்கிடையில் ரேஷன் கடைகளில் வழங்கப்படும் பொருட்கள் மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்று பல புகார்கள் வருகிறது இதனை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வந்தாலும் அதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த முடியவில்லை.

அது மட்டும் அல்லாமல் மாத இறுதியில் குடும்ப அட்டைதாரர்கள் வாங்காத பொருட்களுக்கும் வாங்கியதாக பதிவு செய்யப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது. பமேலும் கடத்தல் மற்றும் பதுக்கல் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.