செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம்,  தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மாண்புமிகு தமிழ்நாட்டு முதலமைச்சர் அவர்கள் இந்த துறைக்கு பொறுப்பேற்றதற்கு பிறகு அவருடைய அறிவுறுத்தலுக்கு ஏற்ப செயல்படுகின்றோம். எடப்பாடி சொல்லுகிறார்… இன்றைக்கு கூட சொல்லி இருக்கிறார்….  நாய் கடிக்கு மருந்து இல்லை என்று சொல்லி இருக்கிறார். எடப்பாடி பழனிச்சாமி எங்கேயாவது உங்களை நாய் கடித்தால்,  2686 ஆரம்ப சுகாதார நிலையங்கள் – நகர்ப்புற சுகாதார நிலையங்கள் இருக்கிறது.

இதில் எல்லா மருத்துவமனைகளிலும் கடந்த 2 அரை ஆண்டுகளுக்கு முன்னால் வரை பாம்புகடிக்கு என்று இருக்கின்ற மருந்து  ASV,  நாய் கடிக்கு என்று இருக்கின்ற மருந்து ARV . இந்த ASVயும் ARVயும் உங்கள் ஆட்சி காலத்தில் வெறும் அரசு மருத்துவமனையில் மட்டுமே இருந்தது. இப்போது ஆரம்ப சுகாதார நிலையங்களில் இருக்கிறது.

ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பது கிராமப்புறங்களில் இருக்கிறது. அப்படி உங்களுக்கு எங்கேயாவது நாய் கடித்தால்…  நீங்கள் தாராளமாக வந்து,  ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்தை போட்டுக் கொள்ளலாம். இந்த வசதி என்பது கடந்த இரண்டரை ஆண்டு காலமாகத் தான் தமிழ்நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது என தெரிவித்தார்.