நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, இந்த சமயத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் என்ன செய்திருக்கிறார்கள் ?  இந்த ஒரு நல்ல சூழ்நிலையில்…  நான்கு புறத்திலிருந்து நமக்கு பாராட்டுகள் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. அந்த சமயத்தில் இவர்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்து இருக்கிறார்கள். இதை கொண்டு வந்து மக்களின் நம்பிக்கையை உடைப்பதற்கு முயற்சி செய்கிறார்கள். இன்று இந்தியாவின் இளைஞர்கள் சாதனை அளவில் புதிய ஸ்டார்ட் அப் களை உருவாக்கி இருக்கிறார்கள்.

இன்று இந்தியாவின்  சாதனை அளவில் வெளிநாட்டிலிருந்து நிதி பெறுகிறது. புதிய உச்சத்தை இந்தியா தொடுகிறது. இந்தியாவைப் பற்றி எந்த ஒரு நல்ல விஷயத்தையும் இவர்கள் கேட்டுக்கொள்ள தயாராக இல்லை. இன்று ஏழைகளின் மனதில் இன்று ஏழைகளின் மனதில் நம் கனவு நினைவாகும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இன்று  நாட்டிலேயே ஏழ்மை என்பது விரைவாக போய்க் கொண்டிருக்கிறது.

நீதி ஆயோக்கினுடைய அறிக்கையின் படி 13 1/2 கோடி மக்கள் ஏழ்மையில் இருந்து விடுபட்டு இருக்கிறார்கள். மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  ஐஎம்எப்  ஒரு ஆய்வறிக்கையில் தந்திருக்கிறது. இந்தியா ஏழ்மையை ஏறத்தாழ ஒழித்து விட்டது என்று கூறுகிறது. நம்முடைய டிஜிட்டல் பேங்க் ட்ரான்ஸ்சாக்சன்…  நம்முடைய சமூக நலத்திட்டங்கள் பற்றி இந்த கருத்தை தெரிவித்து இருக்கிறது. வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் சொல்லி இருக்கிறது என தெரிவித்தார்.