நடிகர் போண்டா மணி 2 கிட்னியும் பாதிக்கப்பட்டு வாரம் இரண்டு முறை அரசு ஆஸ்பத்திரியில் டயாலிசிஸ் செய்து கொண்டுள்ளார். இதனிடையே குடும்ப சூழ்நிலை காரணமாக தொடர்ந்து ஒருசில படங்களிலும் நடித்தும் வருகிறார். இந்த நிலையில் போண்டா மணியின் நிலையை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அறிந்தார். இதையடுத்து போண்டா மணியின் மகள் சாய் குமாரி 12-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில், அவரது மேற்படிப்பு செலவு முழுவதையும் தானே ஏற்றுக்கொண்டு வேல்ஸ் கல்லூரியில் பி.சி.ஏ படிக்க சீட் கொடுத்துள்ளார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இதுபற்றி போண்டாமணி கூறியதாவது “நான் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளேன். இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்துக்கு எனக்கு கிடைத்த பரிசாக என் மகள் 12ம் வகுப்பு தேர்வில் 400 மதிப்பெண்களை பெற்று தேர்ச்சி பெற்று உள்ளார். அதன்பின் கல்லூரியில் சேர்க்க வேண்டும். அதற்காக பணம் வேண்டுமென எனக்கு வேதனையாக இருந்தது. எனினும் ஐசரி கணேஷ் சார் நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்தபோது உங்களது மகள் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சியடைந்தால் எவ்வளவு செலவானாலும் அவரை படிக்க வைக்கிறேன் என உறுதியளித்திருந்தார். அவர் அன்று கூறியதை போன்று என் மகளின் ரிசல்ட்டை அறிந்தவுடனேயே அவருடைய வேல்ஸ் கல்லூரியில் ஒரு ரூபாய் கூட கட்டணம் வாங்காமல் பிசிஏ படிக்க சீட் கொடுத்துள்ளார். இப்படி ஒரு நல்ல மனிதர் தெய்வத்துக்கு சமம். இது என் உழைப்புக்கு கிடைத்த வெற்றியாகும். நான் எப்போதும் அவருக்கு நன்றி கடன்பட்டிருக்கிறேன் என்று உருக்கமாக பேசியிருக்கிறார்.