ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈவேரா உடல் நலக்குறைவினால் மரணம் அடைந்ததால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டு வாக்கு பதிவு நடைபெற்று வருகிறது. காலை 7:00 மணி முதல் மக்கள் அனைவரும் ஆர்வத்தோடு வந்து வாக்கு வாக்களித்து வருகிறார்கள். இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு வைக்கப்படும் மை அழிவதாக அதிமுக குற்றம் சாட்டியிருந்தது.

அதோடு பண பட்டுவாடா நடைபெறுவதாகவும் அதிமுக தேர்தல் ஆணையத்திடம் புகார் கொடுத்திருந்தது. இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசி அமைச்சர் கே.என் நேரு ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தோல்வி பயத்தால் தான் அதிமுக தேர்தலில் வைக்கப்படும் மை அழிவதாக குற்றம் சாட்டியுள்ளதாக கூறியுள்ளார். அதன்பிறகு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக டெபாசிட் இழக்கும். அதிக வாக்கு வித்தியாசத்தில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் வெற்றி பெறுவார் என்றும் கூறினார்.