நாடு முழுவதும் ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு pf கணக்குகளில் வட்டி வரவு வைக்க தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த நிதியாண்டுக்கான பிஎஃப் கணக்கு முதலீட்டின் வட்டி விகிதம் 8.15 சதவீதம் வழங்கப்பட்டு வரும் நிலையில், பயனர்கள் சிலர் ஏற்கனவே தங்களுடைய கணக்குகளில் வட்டி தொகையை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அனைத்து ஊழியர்களுக்கும் செயல்முறை தயாராக உள்ளதாகவும் இதனால் அவர்களின் கணக்கில் எப்போது வேண்டுமானாலும் வட்டி வரவு வைக்கப்படும் என்பதால் வட்டி இழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்காது என்று வருங்கால வைப்பு நிதி அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இதுவரை 24 கோடி கணக்குகளில் வட்டி வரவு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.