இந்தியாவில் UPI வாயிலாக பணம் செலுத்தும் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சி செய்தி வந்திருக்கிறது. தற்போது நீங்கள் UPI வாயிலாக EMI-யிலும் பொருட்களை வாங்க முடியும். முன்பாக ஷாப்பிங்கின்போது தவணை முறையில் பொருளை வாங்க கிரெடிட் கார்டு (அ) டெபிட் கார்டு தேவைப்பட்டது.

எனினும் தற்போது நீங்கள் UPI கட்டணத்தின் வாயிலாக EMI விருப்பத்தை பெறலாம். இச்சலுகையை தனியார் வங்கித்துறையான ICICI வங்கி வழங்குவதாக தெரிவித்து உள்ளது. முன்பை விட கொரோனா தொற்றுக்கு பிறகு UPI வாயிலாக பணம் செலுத்தும் நடைமுறை நாட்டில் அதிகரித்து இருப்பதால் ICICI வங்கி வழங்கும் இவ்வசதி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

ஏனென்றால் நாம் UPI செலுத்தும்போது, QR குறியீட்டை ஸ்கேன் செய்து EMI-ல் பொருட்களை வாங்க முடியும். எலக்ட்ரானிக் பொருட்கள், மளிகைப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வாங்குவதற்கு UPI செலுத்திய பின், ஷாப்பிங்கிற்கு செலவழித்த தொகையை மாத தவணை முறையில் செலுத்த முடியும் என்பது தான் இதன் நன்மை ஆகும்.