
கன்னியாகுமரி தொகுதியில் பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை பின்னுக்கு தள்ளி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த் முன்னிலை வகித்து வருகிறார். அதாவது 13,801 வாக்குகளுடன் முன்னிலையில் உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் பொன். ராதாகிருஷ்ணன் 7,918 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், அதிமுக வேட்பாளர் பசிலியன் நசரேத் 1,337 வாக்குகளும், நாதக வேட்பாளர் மரிய ஜெனிபர் 1,135 வாக்குகளும் பெற்றுள்ளனர்.