காசா பகுதியில் இஸ்ரேல் தனது தாக்குதலை மேலும் தீவிர படுத்திருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில் காசாவுக்கு மின்சாரம், குடிநீர், உணவு உள்ளிட்ட எந்தவிதமான அத்தியாவசிய பொருட்களும் போவதற்கு வழியில்லை. ஆகவே அங்கு மிகவும் சிரமமான சூழ்நிலையை சந்தித்து வரும் மக்கள் அங்கிருந்து வெளியேறி வருகிறார்கள். அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கு வேறு எந்த விதமான பாதையும் இல்லை. எகிப்துக்கு ரப்பா எல்லை வழியாக செல்வதை தவிர வேறு வழியில்லாமல் இருக்கிறார்கள். அப்பாவி மக்கள் போரினால் பாதிக்கப்படக்கூடாது. ஆகவே அவர்கள் அங்கிருந்து வெளியேறிவிட வேண்டும்.

இஸ்ரேல் தாக்குதலிலே உயிரிழக்க கூடாது என   வலியுறுத்தப்படுகிறது. இதன் காரணமாகத்தான் ரப்பா எல்லை பகுதியிலே தாக்குதலை தவிர்க்கும் படி எகிப்து  வேண்டுகோள் விடுத்துள்ளது. ஏனென்றால் ஏற்கனவே இஸ்ரேல் பொதுமக்கள் காசாவை விட்டு வெளியேற வேண்டும். ஹமாஸின் சுரங்க – உட்கட்டமைப்பின் மீது தாக்குதல் நடைபெறும் போது அதில் பொதுமக்கள் உயிர் இழக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே அவர்கள் காசாவை விட்டு வெளியே செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

கிட்டத்தட்ட 3 லட்சம் மக்கள் தங்களுடைய இல்லங்களை இழந்து,  அங்கிருந்து வெளியேறத் தொடங்கி விட்டார்கள்.  ஆகவே அவர்களுக்கு இருக்கும் ஒரே வழியை தாக்குதலை நடத்தி அடைக்க வேண்டாம் என எகிப்து கோரிக்கை விடுத்திருக்கிறது.  காசா பகுதியில் இருந்து அகதிகளாக வரும் மக்களை ஏற்றுக்கொள்ள எகிப்த் தயாராகி இருக்கிறது என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகிறது.  ரப்பா எல்லையான ஒரே வழியையும் இஸ்ரேல் தாக்குதல் நடத்தி அடைத்து விட்டால்,  மக்களுக்கு வேறு வழியே இருக்காது என்கின்ற கவலையும் இதன் மூலம் வெளிப்படுகிறது. ஆகவே தான் எகிப்து நாட்டின் இந்த கோரிக்கை மிக முக்கியமான கோரிக்கையாக பார்க்கப்படுகிறது.