லியோ திரைப்படம் வெற்றியை தொடர்ந்து அதற்கான Success Meet  சென்னை  நேரு உள்விளையாட்டு அரங்கில்   அமோகமாக நடைபெற்று வருகிறது.

  1. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்த “லியோ” திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்து உலகளவில் ரூ.600 கோடி வசூலை நெருங்கி வருகிறது.
  2. திரைப்படம் கலவையான விமர்சங்களை பெற்ற போதிலும் இன்றளவும் அதிகம் கவனம் ஈர்க்கும் படமாக தொடர்ந்து இருந்து வருகிறது.
  3. இந்நிலையில்  நவம்பர் 1 ஆம் தேதியான இன்று  சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் தயாரிப்பாளர்களால் ஒரு வெற்றி சந்திப்பு ஏற்பாடு படத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு அமோகமாக நடைபெற்று வருகிறது.
  4. வெற்றி சந்திப்பில் தளபதி விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உட்பட “லியோ” படத்தின் நடிகர்கள் மற்றும் குழுவினர் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.
  5. விஜய்யின் ரசிகர்கள் இந்த சந்திப்பு விழாவில்  கூடி “லியோ” என்று உற்சாக கோஷமிட்டபடி, மிக உற்சாகமாக படத்தின் வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். 
  6. இதை தொடர்ந்து படம் குறித்து படத்தில் நடித்த அல்லது பணியாற்றிய நடிகர்கள் மற்றும் பிற கலைஞர்கள் தங்களது கருத்துக்களை வெற்றி விழா மேடையில் பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில்,ஆக்சன் கிங் அர்ஜுன் முதல்வன் படத்தில் பத்திரிக்கையாளர் புகழேந்தியாக(காதாப்பாத்திரம்) ரகுவரன் அவர்களிடம் கேள்வி கேட்கும் காட்சி ஒன்று அமைக்கப்பட்டிருக்கும். அதே போல் புகழேந்தி கதாபாத்திரமாக மேடையில் நின்று , தளபதி விஜய் ஆக இருப்பது கஷ்டமா ? அல்லது சுலபமான ஒன்றா ? என கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த விஜய்,  வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு கஷ்டமாக தெரியலாம்.  ஆனால் விஜய்-யாக  இருப்பது ஈஸி தான். அப்படி ஈசியாக இருப்பதற்கு இவர்கள்தான் காரணம் என ரசிகர்களை கை காட்ட,  சுற்றி சில நிமிடங்களுக்கு ரசிகர்களின் கூச்சல்கள் காதை கிழிக்க, விசீல் சத்தம்  கூட்டத்தில் பறந்தது.  தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.