மனிதர்களின் அழகை அதிகரித்து வெளிப்படுத்தும் முக்கிய விஷயமாக முடி இருக்கிறது. ஆனால் முடி கொட்டும் பிரச்சனை இன்றைய ஆண், பெண் இருவருக்கும் பெரிய பிரச்சினையாக திகழ்கிறது. அதற்கு காரணம் மாசு அதிகம் இருக்கும் சுற்றுச்சூழலில் சுற்றுவது, தவறான உணவு பழக்கம் மற்றும் தவறான வாழ்க்கை முறையை பின்பற்றுவதால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.

ஆனால் கூல்ட்ரிங்ஸ் குடித்தால் முடி கொத்து கொத்தாக கொட்டும் என்ற தகவல் உங்களுக்கு தெரியுமா? பதப்படுத்தப்பட்ட கூல்ட்ரிங்ஸ் குடிப்பதால் நாவிற்கு சுவையாக இருந்தாலும் முடி உதிரும் பிரச்சனை ஏற்படுகின்றது. அதற்கு காரணம் கூல்டிரிங்க்ஸில் உள்ள கேப்பைன், அதிகப்படியான சர்க்கரை ஆகியவை தான் காரணம். ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் நாளொன்றிற்கு 5 அல்லது 12 டீஸ்பூன் சர்க்கரை மட்டும் தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆனால் கூல்ட்ரிங்ஸ் வழியாக குறைந்தபட்சமாகவோ 5 டீஸ்பூன் சர்க்கரை உடலுக்கு கிடைக்கும். மேலும் காபி, டீ, பேக்கரி இனிப்பு வகைகள், ஸ்வீட்கள் என வெவ்வேறு வழியில் இனிப்புகளை எடுத்துக் கொள்வோம். இது உடலுக்கு நல்லது இல்லை. மேலும் கேப்பைன் அதிகம் எடுத்துக் கொண்டால் மன அழுத்தம் வரும். இதனால் முடி உதிர்வும் அதிகமாகும்.

இதனால் கூல்டிரிங்ஸ் அதிகம் பருகுவதை தவிர்க்க வேண்டும். தானியங்கள், பருப்பு வகைகள், வேர்க்கடலை, மொச்சை, கொண்டக்கடலை, முட்டை, மீன் ஆகியவை உண்பது முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும். எல்லா நிறங்களிலும் இருக்கும் பழங்கள், காய்கள் தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். எனவே ஆரோக்கியமான கூந்தலை பெற இந்த வழிகளை கடைபிடிக்க வேண்டும்.