பொதுவாக வெளியூர்களுக்கு சுற்றுலா அல்லது விசேஷ நிகழ்ச்சிகளை செல்ல வேண்டும் என்றால் ஒரு வேன் அல்லது தனியார் பேருந்தை வாடகைக்கு எடுப்பார்கள். உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் வெளியே செல்லும்போது அனைவரும் ஒன்றாக செல்வதற்காக தனி வாகனத்தை ஏற்பாடு செய்கிறார்கள். இதே வசதி ரயிலிலும் கிடைக்கும் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? ஆம் உண்மைதான். நீங்கள் நண்பர்களுடன் அல்லது உறவினர்களோடு வெளியில் செல்ல வேண்டும் என்று விரும்பினால் ஒரு ரயில் அல்லது ஒரு பெட்டியை முன்பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த சிறப்பு முன் பதிவுக்காக நீங்கள் பிரத்யேக ஐடி மற்றும் பாஸ்வேர்ட் போன்றவற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். இதை https://www.ftr.irctc.co.in/ftr என்ற இணையதள முகவரிக்குள் சென்று உருவாக்கிக் கொள்ளலாம். மேலும் அதன் பிறகு அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்தால் நீங்கள் ஒரு ரயில் அல்லது ஒரு பெட்டியை முன் பதிவு செய்து கொள்ளலாம்.