இந்தியாவில் தபால் நிலையங்களில் பொது மக்களுக்கு உதவும் வகையில் பல்வேறு விதமான நல்ல சேமிப்பு திட்டங்கள் இருக்கிறது. அந்த வகையில் தபால் அலுவலக நேர வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்தால் வங்கிகளுடன் ஒப்பிடும்போது 6.8 சதவீதம் முதல் 7.5% வரை வட்டி லாபம் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் 1 வருடம் முதல் 5 வருடங்கள் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் நீங்கள் 5 லட்சம் ரூபாயை டெபாசிட் செய்தால் 2.25 லட்சம் ரூபாய் வட்டியாக கிடைக்கும்.

இந்த திட்டத்தில் ஒரு வருடத்திற்கு 6.8 சதவீத வட்டியும், 2 வருடங்களுக்கு 6.9 சதவீத வட்டியும், 3 வருடங்களுக்கு 7 சதவீத வட்டியும், 5 வருடங்களுக்கு 7.5% வட்டியும் கிடைக்கிறது. இந்த திட்டத்தில் குறைந்தபட்ச முதலீடு தொகை ஆயிரம் ரூபாய் ஆகும். மேலும் நீங்கள் 5 லட்ச ரூபாய் டெபாசிட் செய்தால் 5 வருடங்களுக்கு பிறகு வட்டியுடன் சேர்த்து 7.25 லட்ச ரூபாய் கிடைக்கும்.