மகாராஷ்டிராவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பைக் ஆம்புலன்ஸ் சேவை மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒரு சில இடங்களில் பெரும்பாலும் பழங்குடியின மக்களே வசித்து வருகின்றனர். இந்த சூழ்நிலையில் மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் நோயாளிகளை கட்டிலில் மருத்துவமனைக்கு தூக்கிச் செல்லும் அவல நிலை நீடித்து வருகின்றது.

இந்த நிலையில் பாம் நகரில் இருந்து ஒருங்கிணைந்த பழங்குடியின மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மகாராஷ்டிராவில் பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்துடன் படுக்கை, முதலுதவி பெட்டி, மருந்து பொருட்கள் உள்ளிட்டவை இணைக்கப்பட்டு இந்த பைக் ஆம்புலன்ஸ் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக மூன்று பைக் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தியப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.