இந்த வருடம் தீபாவளி பண்டிகை நவம்பர் 12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில் சிவகாசியில் இந்த வருடம் புதிதாக பல பட்டாசு ரகங்கள் வந்துள்ளது. ஒவ்வொரு வருடமும் வாடிக்கையாளர்களை தவிர புதுப்புது ரக பட்டாசுகள் விற்பனை செய்யப்படுகின்றன. அதன்படி இந்த வருடம் கேக் பாக்ஸ் என்று பெயரிடப்பட்டுள்ள பட்டாசு விற்பனைக்கு வந்துள்ள நிலையில் இது ஒரே நேரத்தில் வளைவாக சென்று வெடிக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது.

இதுவரை சினிமாக்களில் வரும் தீப்பொறி காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்ட இந்த ரகம் தற்போது தீபாவளிக்கு வந்துள்ளது.

ஐபிஎல் மற்றும் உலகக்கோப்பை போன்ற விளையாட்டுப் போட்டிகளின் போது மைதானத்தில் வானவேடிக்கை காட்ட பயன்படுத்தப்பட்ட பட்டாசுகள் சிறிது மாற்றம் செய்யப்பட்டு தரையில் வைத்து வெடிக்கும் வகையில் இந்த வருடம் தயார் செய்யப்பட்டுள்ளன.

அதே சமயம் குழந்தைகளை கவரும் வகையில் அவெஞ்சர்ஸ் மற்றும் பார்பி டால் என அதிக அளவில் பட்டாசுகள் இந்த வருடம் புதிதாக தயாரிக்கப்பட்டுள்ளது.

இளைஞர்களை கவரும் வகையில் கம்பி மத்தாப்புகளை இதய வடிவில் தயார் செய்துள்ளனர்.

குழந்தைகளை கவரும் விதமாக நட்சத்திர வடிவம் மற்றும் 1,2,3 என எண் வடிவங்களில் கம்பி மத்தாப்புகள் இந்த தீபாவளிக்கு புதிதாக களமிறங்கியுள்ளன.