சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதும் ஐபிஎல் லீக் ஆட்டம் வருகின்ற மே 12ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு சேப்பாக்கத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆன்லைன் டிக்கெட் விற்பனை இன்று காலை 10.40 மணிக்கு www.insider.in மற்றும் Paytm இணையதள பக்கத்தில் தொடங்கியுள்ளது. இதில் ஒரு நபருக்கு இரண்டு டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 1700 ரூபாய் முதல் டிக்கெட் விலை தொடங்குகிறது.