செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், வழக்குக்கும் பயப்படற இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இல்ல. விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியல. அந்த பக்குவம் இல்ல. இந்த அரசாங்கத்தை  குற்றம் சொல்லி…  நடக்கிறதை  மக்களுக்காக நாங்க சொல்றோம்…  அதை திருத்துகிற வக்கற்ற அரசு. யார் சொல்றாங்களோ…  அவங்க மேலயே கேஸ் போடுறாங்க.

2011ஆம் வருஷம் போட்ட வழக்கை,  இப்ப வந்து எடுக்க வேண்டிய அவசியம் என்ன ? அப்போ திருமதி விஜயலட்சுமி பொருத்தவரை…  ஒரு பகடைக்காயா இந்த அரசால் பயன்படுத்த படுது. அதே சீமானை அரசை எதிர்காம… விமர்சனம் பண்ணாம… விடியா அரசுக்கு துதிப்பாடுன்னா… ஜால்ரா தட்டினா….. விஜயலட்சுமி கொடுத்த கம்பளைண்ட் குப்பைக்கு போயிருக்கும்.

சீமான் கவர்மெண்ட்டை தாக்குறாரு…  விமர்சனம் பண்ணுறாரு…  அதனால விஜயலட்சுமியை கம்பளைண்ட் கொடுக்க தேடி வாங்க வாங்க எழுதி கொடுங்க… உடனே விசாரணை. அரசியல்வாதிகளை ஒரு வழக்கு மூலம் அச்சுறுத்தி விடலாம்  என்ற வகையில்,  ஞாயத்தை எடுத்து சொல்றது…..  ஜனநாயக அரசியலில்  எடுத்து சொல்றது…. மக்களுக்காக ஆதரவு கொடுப்பது…..  இந்த மாதிரி செயல் புரியுறவுங்களை…  அரசியல்வாதிகளானாலும் சார்,  பத்திரிக்கைகள் துறையாக  இருந்தாலும் சரி,  ஒரு வழக்கு மூலம் ஒடுக்கி விடலாம் என்று சொன்னால் ? கண்டிப்பா அது நடக்காது என தெரிவித்தார்.