தெலுங்கானா மாநிலத்தில் உள்ள தோரூரில் உள்ள ஒரு பகுதியில் புதிய ஷாப்பிங் மால் திறப்பு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகை பிரியங்கா மோகன் கலந்து கொண்ட நிலையில் அங்கு மேடை ஒன்று அமைக்கப்பட்டு இருந்தது. அந்த மேடையில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட நின்ற நிலையில் திடீரென மேடை எழுந்து விழுந்து பெரும் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை பிரியங்கா மோகன் உட்பட அனைவரும் மேடையில் இருந்து கீழே விழுந்தனர்.

இந்த விபத்தில் காயங்களுடன் நடிகை பிரியங்கா மோகன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அதன் பிறகு நடிகை பிரியங்கா மோகன் உட்பட காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேலும் இதுகுறித்து நடிகை பிரியங்கா மோகன் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் தான் நலமுடன் இருப்பதாகவும் காயமடைந்த அனைவரும் விரைந்து மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.