தாரா சிங் சௌஹான் 2017-2022 உத்தரப் பிரதேசத்தின் 17வது சட்டப் பேரவையில் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சராக இருந்தார். பிறகு பாஜகவில் இருந்து விலகிய அவர் சமாஜ்வாதி கட்சி சார்பில் கோசி  சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஜூலை 2023 எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து சமாஜ்வாதி கட்சியில் இருந்து விலகி பாரதிய ஜனதா கட்சியில் சேர்ந்தால், அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, இடைத்தேர்தல் நடைபெற்றது.

இடைத்தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது வரை 34 சுற்றில் 31 சுற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதில் சமாஜ்வாதி கட்சி சார்பில் போட்டியிட்ட சுதாகர் சிங் 1,18,394 வாக்குகள் பெற்று முன்னிலை வகுக்கின்றார். பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்ட அவர் 78, 669 வாக்குகளுடன் இரண்டாவது இடத்திலும், அமைதி கட்சி சார்பில் போட்டியிட்ட சனாவுல்லா 2488 வாக்குகளும்….

ஜன் அதிகார் கட்சி சார்பில் போட்டியிட்ட அஃப்ரோஸ் ஆலம் 1899  வாக்குகளும்,  சுயேட்சையாக போட்டியிட்ட வினய் குமார் 1243 வாக்குகளும், சுயேட்சையாக போட்டியிட்ட பிரவேந்திர பிரதாப் சிங் 1164 வாக்குகளும்,சுயேட்சையாக போட்டியிட்ட ரமேஷ் பாண்டே 811 வாக்குகளும்,

ஜனதா கிராந்தி கட்சி (ராஷ்டிரவாதி) சார்பில் போட்டியிட்ட  முன்னிலால் சௌஹான் 580  வாக்குகளும், ஜன ராஜ்ய கட்சி சார்பில் போட்டியிட்ட சுனில் சௌஹான் 520 வாக்குகளும், ஆம் ஜனதா கட்சி (சோசலிஸ்ட்) கட்சி சார்பில் போட்டியிட்ட ராஜ்குமார் சௌஹான்  449 வாக்குகளும் பெற்றன. அதே போல நோட்டாவுக்கு 1651 வாக்குகளும் கிடைத்தன.