கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வில்லுக்குறி பகுதியில் திருமணமான 25 வயதுடைய இளம்பெண் வசித்து வருகிறார். இவர் நேற்று மாலை 5 மணிக்கு அரசு பேருந்து மூலம் தக்கலைக்கு வந்துள்ளார். அப்போதுதான் மணிபர்ஸ் தொலைந்தை பெண் அறிந்தார். அந்த பர்ஸில் 5,100 ரூபாய் பணம், ஏ.டி.எம் கார்டுகள், ரேஷன் கார்டு, பான் கார்டு போன்றவை இருந்துள்ளது.

உடனடியாக அந்த பெண் பேருந்து நிலையத்தில் உள்ள சமய குறிப்பாளர் அறைக்கு சென்று பர்ஸ் தொலைந்ததை தெரிவித்தார். அப்போது அங்கிருந்த ஊழியர்கள் இருக்கையில் கிடந்த மணிபர்சை கண்டுபிடித்தனர். இதனையடுத்து இளம்பெண் கூறிய அடையாளங்களின் அடிப்படையில் பரிசை பெண் பயனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் அப்போது சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.