நாடாளுமன்றத்தில் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று குடியரசு தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தில் நேற்று நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை சமர்ப்பித்த நிலையில், இன்று இரண்டாவது நாளாக கூட்டம் தொடங்கியுள்ளது. இந்நிலையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சிறுகுறி தொழில்களுக்கு பிணையில்லா கடன்கள் வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 47 லட்சம் இளைஞர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 1 லட்சம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உருவாக்கப்படும். வங்கி சேவை தொடர்பான சட்டங்கள் எளிதாக்கப்படும். இளைஞர்களுக்கு திறன் பயிற்சி அளிக்க 30 மையங்கள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.