இஸ்ரேல் – ஹமாஸ் தீவிரவாத அமைப்பு மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக இஸ்ரேல் விமானப்படை நடத்திய தாக்குதலிலே நூற்றுக்கணக்கானோர் பாலஸ்தீன பகுதிகளிலே உயிரிழந்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. ஆரம்பகட்ட தகவல்களின் அடிப்படையில் வந்துள்ள இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என கருதப்படுகிறது. பெரிய கட்டிடங்கள் பல தரை மட்டமாக்கப்பட்டுள்ளன.  இத்தகைய சூழ்நிலையிலே உயிரிழப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று கருதப்படுகிறது.

இஸ்ரேல் மக்கள் உயிரிழப்பு மற்றும் கடத்தல் ஆகியவற்றை நேற்று  ஹமாஸ் தீவிரவாதிகள் மேற்கொண்டிருந்த சூழலில்,  இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள் கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் உயிர் இழந்திருக்கலாம் என கருதப்படுகிறது. உயிரிழந்தோர் அல்லது கைதிகளாக  சிறை பிடிக்கப்பட்டோ இந்த இரண்டும் சேர்த்து 100க்கு மேலே இருக்கும் என இஸ்ரேலில் அதிகாரிகள் கருதுகிறார்கள்.

ஆகவே கடத்தப்பட்டவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தோரை அடையாளம் காணும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சூழலிலே பதிலடி தாக்குதலை  தற்போது இஸ்ரேல் படைகள் கொடுத்து வருகின்றன. பாலஸ்தீனத்தில் மிகப்பெரிய கட்டடங்கள்,  பல அடுக்கு மாடி கட்டடங்கள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. அங்குள்ள மக்களின் உயிரிழப்பு மிகவும் அதிகளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இஸ்ரேல் தாக்குதல் தொடரும் என்பதால் உயிரிழப்பு மேற்கொண்டு அதிகமாகும் எனவும் தகவல்கள்  தெரிவிக்கின்றன.

சண்டை நடையெப்ற்று வரும் நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினரின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேல் அமைப்பினர் சிறை பிடித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது. ஹமாஸ் ஆயுதக் குழு படை குழுவினரை கைது செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.

ஹமாஸ் அமைப்பினரை ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் அறிவித்திருக்கின்றனர். ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 313 ஆக உயர்வு எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.