தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருந்தவர் ராஜேஷ். இவருக்கு 75 வயது ஆகும் நிலையில் சற்று முன் உடல் நல குறைவின் காரணமாக மரணமடைந்தார். இவர்  தமிழ் சினிமாவில் அவள் ஒரு தொடர்கதை என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இதுவரையில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார். மேலும் இவரது மறைவுக்கு தற்போது திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இவர் மாரடைப்பின் காரணமாக உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது. கிட்டத்தட்ட 45 வருடங்களாக சினிமாவில் பயணித்து வந்த இவர் டப்பிங் ஆர்டிஸ்டாகவும் இருந்துள்ளார். அதோடு பல சீரியல் களிலும் நடித்துள்ளார். மேலும் தமிழ் திரையுலகில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக இருந்த ராஜேஷ் மறைவு ரசிகர்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.