தமிழ்நாட்டில் கோர தாண்டவம் ஆடி முடித்த மிக்ஜாம் புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்துள்ளது. இந்த நிலையில், நெல்லூருக்கும் – மசூலிப்பட்டினத்திற்கும் இடையே மிக்ஜாம் புயல் கரையை கடக்க தொடங்கியுள்ளது. புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். அதிகபட்சமாக 110 கி.மீ. காற்று வீசும். மிக்ஜாம் புயல் முழுமையாக கரையை கடந்து முடிக்க இன்று முற்பகல் ஆகிவிடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மிக்ஜாம் புயல் நெல்லூருக்கு 20 கி.மீ. வடக்கு – வட கிழக்கே நிலை கொண்டுள்ளது. இது இன்று காலை ஆந்திர கடற்கரையை பாபட்லாவிற்கு அருகே கடக்கக்கூடும்.