அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருக்கும் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்க இருந்த அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். நாளை தொடங்க இருந்த அரையாண்டு பொதுத் தேர்வை புதன்கிழமை தொடங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.அரையாண்டு பொதுத் தேர்வுக்கான புதிய கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிடும் என அவர் தெரிவித்துள்ளார். மழை வெள்ளத்தால் பாடப்புத்தகங்களை இழந்த மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி புதிய பாடப் புத்தகம், நோட்டுப்புத்தகம் தரப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தேர்வுக்கு படித்து தயாராக முடியாது என்பதால் அரையாண்டு தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் பள்ளிகளின் தூய்மை பணிக்காக ரூபாய் 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.