காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தியின் பாதயாத்திரை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. ராகுல் காந்தி தற்போது ஜம்மு-காஷ்மீரில் பாதயாத்திரை மேற்கொண்டுள்ள நிலையில் நேற்று குடியரசு தினத்தை முன்னிட்டு பாதயாத்திரை நிறுத்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் பாதயாத்திரை தொடங்கியது. பனிஹால் என்ற பகுதியில் ராகுல் காந்தி பாதயாத்திரையை தொடங்கிய நிலையில் அங்குள்ள சுரங்கத்தை கடந்த போது மக்கள் கூட்டம் அதிக அளவில் இருந்தது. இதனால் பாதுகாப்பு கருதி ராகுல் காந்தியை வாகனத்துக்குள் அழைத்து சென்றனர்.

அதோடு பாதுகாப்பு குறைபாடு இருப்பதாக கருதி காங்கிரஸ் கட்சியினர் பாதயாத்திரையை ரத்து செய்தனர். மேலும் ராகுல் காந்தியின் பாத யாத்திரையின் போது பாதுகாப்பு படை வீரர்கள் திடீரென திரும்ப பெறப்பட்டது கடுமையான பாதுகாப்பு மீறலை ஏற்படுத்தியுள்ளது என்றும், மக்கள் கூட்டத்தை ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் கட்டுப்படுத்த தவறிவிட்டதாகவும் காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.