திமுக தொண்டர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நம்முடைய தலைவர் அவர்கள்.. கலைஞர் அவர்கள்… ஒரு சிறு கதை ஒன்று சொல்லி இருக்காங்க. நாம நம்முடைய வீட்டை சுத்தமா வச்சிருக்கனும். நம்ம வீடு.. நாம தான் அதை சுத்தப்படுத்தி வைத்திருப்போம். திடீர்னு ஒரு நாள்,  ஒரு விஷ பாம்பு வீட்டுக்குள்ள வந்துருச்சு.  நாம ஒரு தடி எடுத்து அந்த பாம்பை அடிச்சிட்டோம். பாம்பு ஓடி போயிருச்சு.. வெளிய ஓடி போயிருச்சு… நாம  நிம்மதியா இருக்கோம்..

சரி பாம்பு வெளியே ஓடிப் போயிடுச்சு.. இனிமே வராதுன்னு நினைச்சுட்டு இருக்கோம். ஆனால் மீண்டும் பார்த்தீங்கன்னா…  அதே விஷ பாம்பு மீண்டும் வீட்டுக்குள்ள வந்துருச்சு. நம்ம பார்க்கிறோம்… நாம்  இந்த விஷ பாம்பை அடிச்சோமே… வீட்டுக்கு வெளியே ஓடிப் போயிருச்சு… திருப்பி எப்படி வந்தது அப்படின்னு… வெளியே போய் பார்த்தா…  வீட்டுக்கு வெளியே… குப்பை மண்டி கிடைக்கும்.

இந்த காட்சியை நீங்க இப்ப இருக்கக்கூடிய தமிழ்நாடு அரசியலோடு  பொருத்தி பாக்கணும். நான் வீடு என சொல்வது நம்முடைய தாய் தமிழ்நாடு. தமிழ்நாடு என்கிற மாநிலம். விஷப்பாம்பு என்று சொன்னது ஒன்றிய பாஜக. வீட்டிற்கு  வெளியே இருக்கக்கூடிய குப்பை என்று சொன்னது அதிமுக. நீங்கள் வீட்டை சுத்தமாக வைக்க வேண்டும் என்றால் ? அந்த பாம்பை ஒழிக்கணும்னா….  வெளியே இருக்கக்கூடிய புதர, குப்பையை முதல்ல சுத்தம் செய்யணும். பாஜகவை ஒழிக்கணும்னா… அதோட சேர்த்து அதிமுகவையும் நீங்க ஒழிச்சு கட்டணும்  என தெரிவித்தார்.