இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு மோசடி சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. அரசு என்னதான் மக்களுக்கு அறிவுறுத்தி வந்தாலும் சில மோசடிக்காரர்கள் தினம் தோறும் புதுவிதமான யுக்திகளை பயன்படுத்தி தொடர்ந்து மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதேசமயம் செல்போனிலும் பல ஆபத்துக்கள் நிறைந்துள்ளன. நமக்கு தெரியாமல் சில செயலிகளை பயன்படுத்துவதால் அதன் மூலம் தனிநபரின் தகவல்கள் அனைத்தும் திருடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் தற்போது தனிநப தகவல்களை திருடும் 19 ஆபத்தான செயலிகளின் பட்டியலை மால்வர் எதிர்ப்பு மென்பொருள் நிறுவனமான மால்வேர் பாக்ஸ் வெளியிட்டு உள்ளது. இந்த பட்டியலில் fire game hup and box, cool emoji editor and sticker, universal PDF scanner, private messenger, blood pressure checker, school keyboard, creative 3D launcher, wow beauty camera, GIF emoji emoji உள்ளிட்ட 19 செயலிகள் உள்ளது. இதனை யாரும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.