இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டனர் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.

பாலஸ்தீனியர்களுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே நேற்று காலை முதல் சண்டை நடந்து வருகிறது. நேற்று ஒரே நேரத்தில் ஐந்தாயிரம் மேற்பட்ட ஏவுகணைகளை தொடர்ச்சியாக வீசிய பாலஸ்தீனியர்கள் தொடர்ச்சியாக ஊடுருவல் சம்பதிலும் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியிருந்தது. ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு இஸ்ரேல் சார்பாகவும் பதிலடி கொடுக்கப்பட்டு வந்தது. இருதரப்பினரும் மாறி மாறி ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வந்தனர். இதனால் அங்கு போர் பதற்றம் அதிகரித்து இருந்தது.

ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவாக இஸ்ரேல் மீது லெபனனானின் ஹஸ்புல்லா அமைப்பினரும் தாக்குதல் நடத்தி வருவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.  மேற்கு கரை,  காசா உள்ளிட்ட பகுதிகளில் போர் பதற்றம் நீடித்துவரக்கூடிய நிலையில் இஸ்ரேல் ராணுவத்தினரின் சார்பாக அறிக்கை ஒன்று வெளியாகியிருக்கிறது.நூற்றுக்கும் அதிகமான இஸ்ரேல் அமைப்பினர் சிறை பிடித்ததாக தகவல் வெளியாகியிருந்த நிலையில், இஸ்ரேலுக்குள் ஊடுருவிய ஹமாஸ் படையினர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்திருக்கிறது.

ஹமாஸ் ஆயுதக் குழு படை குழுவினரை கைது செய்ததாகவும் இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. ஹமாஸ் அமைப்பினரை ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவத்தினர் அறிவித்திருக்கின்றனர்.ஹமாஸ் படையினரை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் பலி எண்ணிக்கை 313 ஆக உயர்வு எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.

ஹமாஸ் ஆயுத குழுவின் தாக்குதலுக்கு பதிலடியாக காஸாவில் வங்கிகளை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஹமாஸ் உளவு பிரிவு தலைவரின் பதுங்கிடம் மற்றும் ஆயுதக் கிடங்கு குறிவைத்து இஸ்ரேல் தாக்கி வருகிறது.மேலும் காஸா மீதான தாக்குதல் தொடரும் எனவும் இஸ்ரேல் அறித்துள்ளது.