தனுசு ராசி அன்பர்களே…! பணியில் ஏற்பட்ட தொய்வு அகலும் நாளாக இருக்கும்.

இடமாற்றம் மற்றும் ஊர் மாற்றம் சிந்தனை மேலோங்கும். திருப்தியான சூழல் தான் இருக்கும். பல நாட்களில் நடைபெறாத காரியங்கள் நடைபெறும். மாணவர்கள் நல்ல நிலைக்கு உயர்த்த படுவீர்கள். மேல் படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். பெரியோர் அறிவுடைகளோடு முடிவெடுக்க வேண்டும். குறைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக மாறும். முன்னேற்றத்திற்கு உண்டான வழிகளை வகுத்துக் கொள்வீர்கள்.வாழ்க்கையை திட்டமிட்டு செய்வதற்கு முயற்சிகளை மேற்படுத்துவீர்கள்.

வாழ்க்கை துணையின் மூலம் நல்லது நடக்கும். குடும்பத்தார் மூலம் நல்லது நடக்கும். அனைவரிடமும் விட்டுக் கொடுத்து செல்லுங்கள். எந்த ஒரு காரியத்திலும் அலட்சியம் காட்ட வேண்டாம். ஆன்மீகத்துடன் எந்த ஒரு வேலையும் செய்வீர்கள். தூரதேச தகவல் மகிழ்ச்சியை கொடுக்கும். வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல செய்தி இருக்கும். பணம் விஷயத்தில் கையாளும் பொழுது திட்டமிட்டு எதையும் செய்யுங்கள்.

குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும்.முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது வெள்ளை நிறத்தில் ஆடை அணிய வேண்டும் வெள்ளை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தைக் கொடுக்கும்.அப்படியே சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு சிறிதளவு தயிர் சாதத்தை அன்னதானமாக கொடுத்து வாருங்கள் நல்லது நடக்கும்.

அதிர்ஷ்டமான திசை வடகிழக்கு. அதிர்ஷ்ட எண் 1 மட்டும் 5.
அதிர்ஷ்ட நிறம் வெள்ளை மற்றும் நீல நிறம்.