கும்பம் ராசி அன்பர்களே..!
இன்று பல வழிகளில் பணவரவு ஏற்படும்.

புதிய ஆடைகள் வாங்கக்கூடிய வாய்ப்புகள் இருக்கும். புதிய உறவுகள் ஏற்படக்கூடும். அரசாங்கத்தால் அனுகூலம் ஏற்படும்.
தடைகளும் தாமதமும் ஏற்படும் நாளாக இருக்கும். ஆரோக்யத்தில் கவனம் வேண்டும். பேச்சில் கவனம் இருக்கவேண்டும். தொழில் வியாபாரத்தில் பணத்தேவைகள் உண்டாகும். எப்பொழுதும் கவனமாக இருந்துக் கொள்ளுங்கள்.

உத்தியோகத்தில் உள்ளவர்கள் ஓய்வின்றி பணியாற்ற வேண்டியதிருக்கும். ஜாமீன் கையெழுத்து போடவேண்டாம். வாகனத்தில் செல்லும் பொழுது பொறுமையாக செல்ல வேண்டும். பொறுப்புகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள். குடும்பத்தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். முன்கோபத்தை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும். கணவன் மனைவி இருவரும் வாக்குவாதங்களில் ஈடுபட வேண்டாம். இன்று வாகன செலவுகள் உண்டாகும். பணவிஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பேச்சினை கட்டுப்படுத்த வேண்டும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது இளமஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். இளமஞ்சள் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே முருகப்பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: வடகிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 5 மற்றும் 9.
அதிர்ஷ்டமான நிறம்: இளமஞ்சள் மற்றும் நீல நிறம்.