அதிமுக காலத்தில் அமைச்சராக இருந்த வளர்மதி வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.  2001 – 2006 ஆம் ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பதிவான வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் வளர்மதி.

அந்த வழக்கை தாமாக முன்வந்து நீதிபதி ஆனந்த வெங்கடேசன் எடுத்திருக்கிறார். அதே போல திமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக ஐ.பெரியசாமி மீதான வழக்கையும் நீதிபதி நனைத்த வெங்கடேசன் எடுத்துள்ளார். இந்த இரண்டு வழக்குகளும் நாளை அவருக்கு முன்பாக விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

இன்று பொன்முடி தொடர்பான வழக்கு விசாரணை வந்த போது நீதிபதி ஆனந்த் வெங்கடேசன், இது போன்ற வழக்குகளை விசாரணைக்கு எடுத்து அவரே விசாரிக்க கூடாது என்று தமிழக அரசின்   லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் அது தொடர்பாக அடுத்த வாரம் உத்தரவு பிறப்பிப்பதாக தெரிவித்திருக்கிறார். இந்நிலையில் தற்போது புதிதாக இரண்டு வழக்குகள் விசாரணைக்கு எடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.