ஆசியக்கோப்பை நெருங்கும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் வீரர் முகமது நயீம் ஷேக் தீயில் நடந்த வீடியோ வைரலாகி வருகிறது..

ஆசிய கோப்பை 2023 இம்மாதம் 30ஆம் தேதி முதல் செப்டம்பர் 17ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தப் போட்டியில் இந்தியாவுடன் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய அணிகள் பங்கேற்கின்றன. ஒருநாள் போட்டி முறையில் நடைபெறும் இந்த போட்டிக்கான பயிற்சியை அனைத்து அணிகளும் தொடங்கியுள்ளன. பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளம் ஆகிய அணிகள் ஏற்கனவே அணிகளை அறிவித்துள்ள நிலையில், ஆசிய கோப்பையில் பங்கேற்கும் இந்திய அணியை இம்மாதம் 21ஆம் தேதி அறிவிக்கவுள்ளது. பெரிய அணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தும் வங்கதேசம் ஒருமுறை கூட ஆசிய கோப்பையை வெல்லவில்லை. ஆனால் இந்த முறை எப்படியும் கோப்பையை தட்டித்தூக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறது.

இந்த வரிசையில் தற்போது டாக்காவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பயிற்சி முகாமில் பங்களாதேஷ் அணி பங்கேற்றுள்ளது. அனைத்து வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அந்நாட்டு கிரிக்கெட் வீரர் முகமது நயீம் ஷேக் இந்த பயிற்சியை வேறு லெவலுக்கு கொண்டு சென்றார். ஆசிய கோப்பை போன்ற மெகா போட்டிகளில் விளையாடும்போது அழுத்தம் ஏற்படுவது இயல்பு..மன உளைச்சலை சமாளிக்க சிறப்பு பயிற்சி எடுத்து வருகிறார். அதற்காக நெருப்பில் நடக்கிறார். சபித் ரெஹான் என்ற பயிற்சியாளரின் மேற்பார்வையில் நயீம் தீயில் நடந்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தீ நடைப்பயணம் பழங்காலத்திலிருந்தே விளையாட்டு வீரர்களால் நடைமுறையில் உள்ளது. பெரிய போட்டிகளில் அழுத்தத்தை சமாளிக்க அவர்கள் ஃபயர் வாக்கிங் செய்கிறார்கள். அவ்வாறு செய்வதன் மூலம் வீரர்கள் மனதளவில் பலமடைவார்கள் என நம்பப்படுகிறது. தற்போது வங்கதேச வீரர் நயீம் அதையே செய்துள்ளார். கடந்த ஆண்டு ஆசிய கோப்பையில் வங்கதேசம் மோசமாக செயல்பட்டது.  ஆனால் இம்முறை இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு கடும் போட்டியை கொடுக்க வங்கதேசம் உறுதியாக உள்ளது. வங்கதேச அணிக்கு ஷகிபுல் ஹசன் கேப்டனாக இருப்பார்.

ஆசிய கோப்பைக்கான வங்காளதேச அணி :

ஆசிய கோப்பைக்கான வங்காளதேச அணி: ஷகிப் அல் ஹசன் (கேப்டன்), லிட்டன் தாஸ், தன்சித் தமீம், நஜ்முல் ஹொசைன் சாண்டோ, தவ்ஹித் ஹிரிடோய், முஷ்பிகுர் ரஹீம், முகமது நைம் ஷேக், தஸ்கின் அகமது, முஸ்தாபிசுர் ரஹ்மான், ஷோரிஃபுல் இஸ்லாம், எபடோட் ஹொசைன், ஹசன் மஹ்மூத், நசும் அகமது.மெஹிதி ஹசன் மிராஸ், ஷமிம் ஹொசைன், அஃபிஃப் ஹொசைன், மஹேதி ஹசன்.