நதிகளில் தங்கம் கிடைக்கிறது எனும் செய்தியானது கேட்பதற்கு ஆச்சர்யமாகவும், நம்பமுடியாததாகவும் இருக்கும். எனினும் அது உண்மை தான். அதாவது, உலகிலுள்ள ஒருசில ஆறுகளில் தங்கம் கிடைக்கிறதாம். அதன்படி ஜார்க்கண்ட், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவின் சில பகுதிகளில் பாயும் சுபர்ணரேகா நதியின் நீரிலிருந்து தங்கமானது கிடைக்கிறது.

ஜார்க்கண்டிலுள்ள தமாத் மற்றும் சரண்டா உள்ளிட்ட இடங்களில் உள்ளூர் பழங்குடியினர் சுபர்ணரேகா ஆற்றின் மணலை வடிகட்டி அதிலுள்ள தங்கத்துகள்களை சேகரிக்கின்றனர். சுபர்ணரேகா நதியை போன்றே அதன் துணை நதியான கரகாரி ஆற்றின் மணலில் தங்கத் துகள்களானது காணப்படுகிறது. சுபர்ணரேகா நதியிலுள்ள தங்கத் துகள்கள் கரகாரி நதி வழியே சென்றடைகிறது எனவும் சிலர் சொல்கின்றனர். எனினும் இதுகுறித்த தெளிவான ஆதாரம் எதுவும்.